மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
9 hour(s) ago
பயிற்சி முகாம்
9 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
9 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
9 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
10 hour(s) ago
சிவகங்கை: பழைய பென்ஷன் திட்டம், சரண்டர் விடுப்பு நிறுத்தி வைத்தது உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 135 ஆசிரியர்கள் உட்பட 350 பேர் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தேர்தல் வாக்குறுதி அளித்தபடி பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்து, நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பை விடுவிக்க வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை களைய வேண்டும்.காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அலுவலர், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பணியாளர் கூட்டமைப்பினர் நேற்று தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர்.இதில், ஊரக வளர்ச்சி துறை, தொடக்க கல்வித்துறை உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 135 ஆசிரியர்கள் உட்பட 350 ஊழியர்கள் ஈடுபட்டனர்.காரைக்குடி தாசில்தார் அலுவலகம் முன் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசு பிரபாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். காளையார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் கணேசன், வட்டார தலைவர் விக்டர் ஜேம்ஸ், மாவட்ட பொதுக்குழு முருகன், பொருளாளர் ஜோசப் செபஸ்தியான் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
10 hour(s) ago