மேலும் செய்திகள்
ரத்த தான முகாம்
17-Jul-2025
காரைக்குடி; காரைக்குடி அழகப்பா பல்கலையில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ரவி கலந்து கொள்கிறார். காரைக்குடி அழகப்பா பல்கலையின் 36 ஆவது பட்டமளிப்பு விழா நாளை, பல்கலை பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெறுகிறது. கவர்னர் ரவி பட்டமளிப்பு விழாவில் தலைமையேற்று பட்டங்களை வழங்குகிறார். உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் மற்றும் பெங்களூரு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் வி. நாராயணன் கலந்து கொள்கின்றனர். அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி வரவேற்று பல்கலை சாதனை குறித்து பேசுகிறார். விழாவில் ஒருவருக்கு அறிவியல் அறிஞர் பட்டம், 133 பேருக்கு முனைவர் பட்டம் உட்பட, பல்வேறு துறைகளில் பயின்ற 43 ஆயிரத்து 142 பேர் பட்டம் பெறுகின்றனர். இதில், 314 மாணவ மாணவியருக்கு நேரடியாக பட்டங்கள் வழங்கப்படுகிறது.
17-Jul-2025