மேலும் செய்திகள்
பொதுமக்கள்குறைதீர் முகாம்
13-Feb-2025
திருப்புத்துார்: திருப்புத்துாரில் போலீசார் நடத்திய குறை தீர் முகாமில் 31 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. திருப்புத்துார் போலீஸ் உபகோட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது போலீசார் முகாம் நடத்தி தீர்வு காண்பர்.நேற்று திருப்புத்துார் டவுன், கண்டவராயன்பட்டி, திருக்கோஷ்டியூர், கீழச்சிவல்பட்டி, எஸ்.எஸ்.கோட்டை, மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் இருந்த மனுக்கள் மீது 'டி.எஸ்.பி.செல்வகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் விசாரணை நடத்தினர். குடும்பம்,நிலம்,தகராறு, பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சமரசம் செய்து முடிக்கப்பட்டது.திருப்புவனத்தில் மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் திருப்புவனம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன்களுக்குட்பட்ட மக்களின் குறைதீர் கூட்டம் நடந்தது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி, பழையனுார் காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் தீர்வு காணப்படாத மனுக்கள் மீது விசாரணை நடத்தி உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.
13-Feb-2025