உள்ளூர் செய்திகள்

குரு பூஜை விழா

திருப்புவனம்:திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்த பெருமானின் குருபூஜை விழா நடந்தது. நால்வர் சன்னதியில் அபிஷேக ஆராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து திருமுறை விண்ணப்பம், பக்திசொற்பொழிவு முடிந்து தீபாராதனைக்கு பின் திருஞானசம்பந்தர் உற்ஸவப்புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீவேலப்ப தேசிகர் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !