உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் ஜன.11ல் அனுமன் ஜெயந்தி

திருப்புத்துாரில் ஜன.11ல் அனுமன் ஜெயந்தி

திருப்புத்துார்: திருப்புத்துார் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஜன.11 ல் அனுமன் ஜெயந்தி நடைபெறுகிறது.மன்னர்கள் காலத்திலிருந்து கோட்டையின் வட மேற்கு திசையில் இக்கோயில் அமைந்துள்ளது. அனுமன் இங்கு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஜன.11ல் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறந்து மார்கழி பூஜை நடைபெறும் .தொடர்ந்து காலை 7:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷகம் நடைபெறும். பின்னர் வடைமாலையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து தீபாராதனை நடைபெறும். பின்னர் மாலை 4:00 மணிக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். மாலை 6:00 மணிக்கு உற்ஸவர் தீபாராதனையும் தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெறும்.நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 10:00 மணிக்கு பக்த ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், திருவாராதனமும் நடைபெறும். மாலை 4:00 மணிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ