உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் பலத்த மழை

திருப்புவனத்தில் பலத்த மழை

திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று மாலை திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் விவசாய பணிகள் நடந்து வருகின்றன.கடந்த சில நாட்களாக மழை இல்லாத நிலையில் நேற்று மாலை ஐந்து மணி முதல் அரை மணி நேரம் கன மழை பெய்தது. மழை காரணமாக மதுரை - ராமநாதபுரம் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.மழை காரணமாக தெருவோர சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.சிவகங்கையிலும் மாலை பலத்த மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ