உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு

மானாமதுரையில் ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு

மானாமதுரை; மானாமதுரையில் ஓட்டல் உரிமையாளரை சிலர் ஓட,ஓட விரட்டி வெட்டியதில் காயமடைந்தார். மானாமதுரை ஆதனுார் சாலை பகுதியை சேர்ந்த முகமது இக்ரம் முல்லா மகன் முகமது யாகூப் சேட் 33,இவரது குடும்பத்தினர் கேப்பர்பட்டினம் அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றனர். அருகிலேயே இவர் இரவு நேர ஓட்டல் நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத 2க்கும் மேற்பட்டோர் முகமது யாகூப் சேட்டுவை அரிவாளால் வெட்டினர். அவர் மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் ஓடிய போதும் அவரை பின்தொடர்ந்து விரட்டி வெட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மானாமதுரை போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை