உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓட்டல் உரிமையாளர் கொலை

ஓட்டல் உரிமையாளர் கொலை

சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் கடன் தர மறுத்த ஓட்டல் உரிமையாளர் ராமசாமியை 60, கீழே தள்ளி கொலை செய்த, புதுப்பட்டி ராஜசோழன் 32, கைதானார்.சிங்கம்புணரியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் ராமசாமி 60. இவர் பிரான்மலை ரோட்டில் ஓட்டல் நடத்தினார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு எஸ்.வையாபுரிபட்டி அருகே புதுப்பட்டி சுப்பிரமணியன் மகன் ராஜசோழன் 32, வந்தார். கடனுக்கு சாப்பாடு பார்சல் தருமாறு கேட்டுள்ளார். ஏற்கனவே பாக்கி இருப்பதால் கடன் தரமுடியாது என ராமசாமி கூறியுள்ளார். இந்த ஆத்திரத்தில் ராமசாமியை ராஜசோழன் கீழே தள்ளிவிட்டார். இதில் தலையில் அடிபட்டு ராமசாமி பலியானார். எஸ்.வி., மங்கலம் போலீசார், ராஜசோழனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை