உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விடுதி பணியாளர் சங்க கூட்டம் 

விடுதி பணியாளர் சங்க கூட்டம் 

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு பிற்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முனீஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். மகளிர் அணி தலைவர் சாந்தி, செயலாளர் செல்வி, நிர்வாகிகள் நவீன்குமார், வினோத், கோவிந்தன், கோவிந்தம்மாள், தேவி பிரியா, ரகுபதி பங்கேற்றனர். விடுதியில் காலியாக உள்ள சமையலர், இரவு காவலர் பணியிடம் நிரப்ப வேண்டும். பதவி உயர்வு, பணியிட மாற்றத்தின் போது மாவட்ட பணிமூப்பு பட்டியலை பின்பற்ற வேண்டும். விடுதி துாய்மை பணியாளர்களுக்கு சம்பள நிலுவையை விடுவிக்க வேண்டும் என தீர்மானித்தனர். பொருளாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை