மேலும் செய்திகள்
இளையான்குடிக்கு செயல் அலுவலர்
11-Jun-2025
சிங்கம்புணரி; சிங்கம்புணரி பேரூராட்சியில் 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை மக்கும், மக்கா குப்பைகளாக தரம் பிரித்து கையாள மேலுார் ரோட்டில் வளம் மீட்பு பூங்கா என்ற பெயரில் குப்பைக்கிடங்கு உள்ளது.நேற்று மாலை 4:00 மணிக்கு இக்கிடங்கில் உள்ள குப்பையில் தீ பரவி, கிடங்கு முழுவதும் பரவத் தொடங்கியது. இக்கிடங்கு அருகே 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் பதட்டம் அடைந்தனர். பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, செயல் அலுவலர் சண்முகம் ஆகியோர் தீத்தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு பேரூராட்சி பணியாளர்கள் உதவியுடன் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
11-Jun-2025