| ADDED : நவ 27, 2025 07:00 AM
இளையான்குடி: இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நகர ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் உமர் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் சைபுல்லாஹ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இளையான்குடியில் அதிகரித்து வரும் நாய்களால் தினமும் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாய்களை பிடிப்பதில் மெத்தனம் காட்டும் இளையான்குடி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து டிச.9ம் தேதி அலுவலகத்திற்குள் நாய்களை விடும் போராட்டம் நடத்துவது, போக்குவரத்து நெரிசலை கண்டு கொள்ளாமல் இருக்கும் போக்குவரத்து போலீசாரை கண்டிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் பஷீர் அஹமது, மஹ்பூப், மண்ணிவாக்கம் யூசுப்,சிக்கந்தர்பாட்சா, ஜமால் முஹம்மது, ம.ஜ.க., நகர பொருளாளர் உஸ்மான், துணைச் செயலாளர்கள் அபூபக்கர், சாகுல், தொழிற் சங்க நகர செயலாளர் அஜ்மல், கபீர் கலந்து கொண்டனர்.