உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி ஆய்வறிக்கை வெளியிட பட்டினி போராட்டம்

கீழடி ஆய்வறிக்கை வெளியிட பட்டினி போராட்டம்

கீழடி: கீழடி அருங்காட்சியகம் முன் கீழடி ஆய்வறிக்கையை திருத்தமின்றி வெளியிட மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பட்டினி போராட்டம் நடந்தது. கீழடியில் ஆய்வு நடத்திய மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் 982 பக்க அறிக்கையை 2023ல் மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை திருத்தமின்றி அப்படியே வெளியிட வேண்டும் என த.மு.எ.ச., மாவட்ட தலைவர் தங்கமுனியாண்டி தலைமையில் கீழடி அருங்காட்சியக வாசலில் நேற்று பட்டினி போராட்டம் நடந்தது. போராட்டத்தை முன்னாள் ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் தொடங்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சன்யா உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய தொல்லியல் துறைக்கு எதிராக கோஷமிட்டனர். மாவட்ட பொருளாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை