உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து இடம் விற்பனை.. கணவன் கைது: மனைவி உட்பட 3 பேருக்கு வலை

போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து இடம் விற்பனை.. கணவன் கைது: மனைவி உட்பட 3 பேருக்கு வலை

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே போலி வாரிசு சான்றிதழ் தயாரித்து அடுத்தவர் இடத்தை விற்ற கணவரை போலீசார் கைது செய்தனர். மனைவி உட்பட மூவரை தேடி வருகின்றனர்.தேவகோட்டை அருகே பேராட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ரத்தினம்மாள் 41. இவரின் தந்தை மாரிமுத்து பெயரில் பேராட்டுக்கோட்டை கிராம குரூப்பில் இடம் உள்ளது. இவரது தந்தை இறந்த பிறகு ரத்தினம்மாள், தாயார் திலகவதி, அண்ணன் சாமிராஜ் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் திலகவதி கடன் கேட்டதை பயன்படுத்தி அருகில் உள்ள சிறுமருதூரைச் சேர்ந்த செந்தில்நாதன் திலகவதி மட்டுமே வாரிசு என சான்றிதழ் போலியாக பெற்றுள்ளார்.பின் செந்தில்நாதன் மனைவி கவிதா பெயரில் பவர் பத்திரம் பதிவு செய்து ஒரே மாதத்தில் 2016 ல் காரைக்குடியைச் சேர்ந்த அருணாசலத்துக்கு தேவகோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் அந்த இடத்தை விற்பனை செய்து பதிவு செய்தார். இந்த விவரம் தெரிய வந்தவுடன் சாமிராஜ் காரைக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட இடத்தை பாக்கியம் என்பவருக்கு 2020ல் மீண்டும் விற்பனை செய்து பதிவு செய்தனர்.இதனையடுத்து நேற்று ரத்தினம்மாள் தேவகோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போலி சான்றிதழ் தயாரித்து இடம் விற்பனையில் ஈடுபட்ட செந்தில்நாதனை கைது செய்தனர். மனைவி கவிதா, அருணாசலம், பாக்கியம் ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை