இளையான்குடி பேரூராட்சி கூட்டம்
இளையான்குடி,: இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் இப்ராகிம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிவன் கோயில் தெய்வ புஷ்கரணி ஊரணி அருகில் உள்ள காலி இடத்தை தரை வாடகைக்கு விடுவதற்கு தீர்மானம் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் நடந்த விவாதங்கள்
செய்யது ஜமீமா, தி.மு.க., கவுன்சிலர்: எனது வார்டில் போர்வெல்லை சரி செய்ய வேண்டும்.குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும்.* காங்., கவுன்சிலர் அல்அமீன்: ரசூலா சமுத்திரம் பகுதியில் எரியாமல் உள்ள தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும்.* அ.தி.மு.க., கவுன்சிலர் நாகூர் மீரா: புஷ்கரணி ஊரணி பகுதி ஆக்கிரமிப்பில் இருந்த போது கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு பேரூராட்சி நிர்வாகத்தால் ரூ.1 கோடி மதிப்பில் துார்வாரப்பட்டு நடைமேடை, பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஆகவே அந்த இடத்தை தரை வாடகைக்கு விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.* பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், செயல் அலுவலர் பொறுப்பு சண்முகம்: கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றனர்.