உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடியேறும் போராட்டம் அதிகாரிகள் சமரசம்

குடியேறும் போராட்டம் அதிகாரிகள் சமரசம்

பூவந்தி : பூவந்தியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் குடியேறும் போராட்டம் நடந்தது. பூவந்தியில் தாழ்த்தப்பட்ட மக்கள் 142 பேருக்கு 27 ஆண்டுகளுக்கு முன் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அவரவருக்கு உரிய இடத்தை அளவீடு செய்து தரவில்லை. இதனால் மக்கள் வீடு கட்டி குடியேற முடியாமல் சிரமத்திற்குள்ளகினர். பல முறை போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமையில் அய்யம்பாண்டி, வீரையா, சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பட்டா பெற்ற மக்கள் பூவந்தியில் அரசு வழங்கிய இடத்திற்கு சென்று குடியேறினர். அவர்களிடம் தாசில்தார் ஆனந்த பூபாலன் தலைமையில் அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 7ம் தேதிக்குள் 142 பயனாளிகளுக்கும் தலா இரண்டரை சென்ட் வீதம் அளவீடு செய்யப்பட்டு வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி