மேலும் செய்திகள்
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் நியமனம்
16-Oct-2024
சிவகங்கை: மாவட்டத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலை பள்ளிகளில் யாவரும் கேளிர் மாணவர்குழு- என்ற அமைப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் மாவட்ட அளவில் அனைத்து அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் செப்., 5 முதல் இக்குழு செயல்படுகிறது. ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளில் நவ., 14 குழந்தைகள் தினம் முதல் இந்த அமைப்பு விரிவுபடுத்தப்படும். இது குறித்து சிவகங்கை மருதுபாண்டியர் நகர் கல்வித்துறை கருத்தரங்கு கூடத்தில் வட்டார கல்வி அலுவலர், மேற்பார்வையாளர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், யாவரும் கேளிர் பொறுப்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் 130 பேர்களுக்கு இது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) செந்தில்குமரன் வரவேற்றார். வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் புவனேஸ்வரன், சி.இ.ஓ., பி.ஏ., வெங்கட நடேசன், கலெக்டரின் தனி எழுத்தர் ஜெயப்பிரகாசம், பட்டதாரி ஆசிரியர்கள் சார்லஸ் பென்னி, மரியா ஆக்னஸ், வஜிராபானு, கருணாராணி பயிற்சி அளித்தனர். மாவட்ட அளவில் பயிற்சி எடுத்தவர்கள் வட்டார அளவில் நவ., 7 மற்றும் 8ம் தேதி தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். நவ., 14 முதல் மாவட்ட அளவில் இந்த அமைப்பு செயல்படும். இக்குழுவை ஒருங்கிணைக்க ஆசிரியர்கள் கண்ணன், பழனிச்சாமி, சாந்தா நியமிக்கப்பட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோ ஏற்பாடுகளை செய்துஇருந்தார். உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு நன்றி கூறினார்.
16-Oct-2024