உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தெரு நாய்கள் அதிகரிப்பு  சிவகங்கையில் ரேபிஸ் அச்சம்   நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல் 

தெரு நாய்கள் அதிகரிப்பு  சிவகங்கையில் ரேபிஸ் அச்சம்   நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தல் 

சிவகங்கை : தெரு நாய்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நாய்கடியால் 'ரேபிஸ்நோய்' தாக்கும் அச்சத்தில் மக்கள், மாணவர்கள் தவிக்கின்றனர். மாவட்டத்தில் காரைக்குடி மாநகராட்சி, சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை நகராட்சி, 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள 445 ஊராட்சிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதி தெருக்களில் 87,123 நாய்கள் வரை வசிக்கின்றன. இது தவிர வீடுகளிலும் முறைப்படி நாய்கள் வளர்க்கின்றனர். ரோட்டில் திரியும் நாய்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் குடும்ப கட்டுப்பாடு செய்து, இனப்பெருக்கத்தை தடுக்க வேண்டும். அப்போது தான் தெரு நாய்கள் அதிகரித்து, அவற்றிற்கு தோல் நோய், வெறி பிடிப்பது போன்ற பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும். ஆனால் உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட கால்நடை துறை வெறிநாய்களை தடுக்கவும், நாய்கள் இனப்பெருக்கத்தை குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தெருக்களில் திரியும் நாய்கள் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளை விரட்டி விரட்டி கடிக்கின்றன. வாகனங்களில் செல்வோரையும் விட்டு வைக்காமல் விரட்டி கடிக்கின்றன. இதன் மூலம் வெறிநாய் கடிக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் பலர் 'ரேபிஸ் நோய்' தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தல் இல்லாத வகையில், அவற்றின் இனப்பெருக்கத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை