மேலும் செய்திகள்
வேகத்தடையை கடக்க திணறும் மக்கள்
11-Apr-2025
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி படமாத்துார் விலக்கில் விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை தடுப்பு அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. திருப்பாச்சேத்தியில் இருந்து படமாத்துார் செல்லும் பாதையில் நான்கு வழிச்சாலை குறுக்கிடுகிறது.படமாத்துார், கானுார், கல்லுாரணி, வேம்பத்துார் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பலரும் திருப்பாச்சேத்தி வந்து செல்கின்றனர். இதுதவிர திருப்பாச்சேத்தி, மாரநாடு, ஆவரங்காடு உள்ளிட்ட கிராமமக்கள் சிவகங்கை சென்று வர படமாத்தூர் சாலையை பயன்படுத்துகின்றனர். நான்கு வழிச்சாலை சந்திப்பிற்கு முன் வேகத்தடை இருந்தாலும் அதனையும் மீறி போதிய விழிப்புணர்வு இன்றி நான்கு வழிச்சாலையை கிராமமக்கள் கடப்பதால் அடிக்கடி விபத்து நேரிட்டு வருகின்றன.போலீசாரும் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் நடைமுறையில் அதனை கண்டு கொள்வதே இல்லை.நான்கு வழிச்சாலையை கடக்கும் முன் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வருகின்றனவா என பார்த்த பின் சாலையை கடக்க வேண்டும், ஆனால் அதனை கடைபிடிக்காமல் விபத்தில் சிக்கி பலர் காயமடைகின்றனர்.எனவே படமாத்துார் ரோட்டின் குறுக்கே செல்லும் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் எச்சரிக்கை போர்டு அமைத்தால் ஓரளவிற்கு விபத்து குறைய வாய்ப்புண்டு.
11-Apr-2025