உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி

கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி

மானாமதுரை : மானாமதுரை போலீஸ் சப் டிவிஷனுக்குட்பட்ட கிராமங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக டி.எஸ்.பி., நிரேஷ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மானாமதுரை போலீஸ் சப் டிவிஷனுக்குட்பட்ட மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பழையனுார், பூவந்தி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட கிராம பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையிலும், திருடர்களை கண்காணிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.தற்போது 52க்கும் மேற்பட்ட கிராமங்களில் 110க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குற்றங்களை தடுப்பதோடு, திருடர்களையும் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை