உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரான்மலை பள்ளியில் இணைய சேவை துண்டிப்பு ஆசிரியர், மாணவர்கள் அவதி

பிரான்மலை பள்ளியில் இணைய சேவை துண்டிப்பு ஆசிரியர், மாணவர்கள் அவதி

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு துவக்கப்பள்ளியில் இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலைப்பள்ளிகளில் இன்டர்நெட் இணைப்பு, ஸ்மார்ட் வகுப்புகளுடன் கூடிய ஹைடெக் லேப்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 15 மாணவர்களுக்கு அதிகமாக படிக்கும் துவக்க பள்ளிகளில் இணைய சேவையுடன் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து அனைத்து பள்ளிகளுக்கும் வெண்டார்கள் மூலம் இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பிரான்மலை அரசு துவக்கப்பள்ளியில் 2 வாரமாக இண்டர்நெட் துண்டிக்கப்பட்டு வேலை செய்யவில்லை. இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுகிறது. இதை தவிர எமிஸ், வருகைப் பதிவேடு, வினாடி வினா, பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் கூட்டங்கள் நிகழ்ச்சிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது. உடனடியாக இன்டர்நெட் சேவையை சீரமைத்து பழுதுகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ