உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சீர்மரபினர் நல வாரிய அட்டை வழங்கல்

சீர்மரபினர் நல வாரிய அட்டை வழங்கல்

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கல், ரூ.16.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர்கள் பெரியகருப்பன், மெய்ய நாதன் முன்னிலை வகித்தனர்.எம்.எல்.ஏ.,தமிழரசி, நல வாரிய துணை தலைவர் ராஜா அருண்மொழி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் விஜயகுமார், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, நகராட்சி தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் பங்கேற்றனர்.விழாவில் 1,857 உறுப்பினர்களுக்கு நலவாரிய அட்டையும், ரூ.16.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ