உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷன் கடைகளில் 54 வயதினருக்கு வேலை பதிவு மூப்பு படி ‛இன்டர்வியூ கார்டு  

ரேஷன் கடைகளில் 54 வயதினருக்கு வேலை பதிவு மூப்பு படி ‛இன்டர்வியூ கார்டு  

சிவகங்கை:தமிழகத்தில் ரேஷன் கடை விற்பனையாளர், எடையாளர் காலிபணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு படி 54 முதல் 56 வயதினருக்கு 'இன்டர்வியூ கார்டு' அனுப்பி வருகின்றனர்.கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் காலியாகவுள்ள 3,000 விற்பனையாளர், எடையாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்காக மாவட்ட கூட்டுறவு ஆட்சேர்ப்பு மையங்களில் இன்று மாலை வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு, பட்டதாரி தேர்ச்சி கல்வி தகுதிப்படி விண்ணப்பம் பெறுகின்றனர். முன்னாள் ராணுவ வீரர் ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்புபடி நியமிக்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, எடையாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி, விற்பனையாளர் பணிக்கு பட்டம் பெற்றோர் பதிவு மூப்பு பட்டியலை பெற்றனர்.மாவட்டந்தோறும் 1988 ம் ஆண்டு முதல் 1991 ம் ஆண்டு வரை பதிவு செய்தவர்களுக்கும் 'இன்டர்வியூ கார்டு' அனுப்பி வருகின்றனர்.1988- -91 ம் ஆண்டுகளில் பட்டம் பெற்று பதிவு செய்திருந்தவர்களுக்கு, 34 ஆண்டுக்கு பின் ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கு நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.

பதிவு மூப்பு பட்டியல் வழங்கல்

கூட்டுறவு துறை அதிகாரி கூறியதாவது: ரேஷன் கடை விற்பனையாளர், எடையாளர் பணிக்கு வயது நிபந்தனை இல்லை.இதனால், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியலை கேட்டபோது, இந்த வயதினர் பட்டியலை வழங்கினர். அவர்களுக்கு 'இன்டர்வியூ கார்டு' அனுப்பி வருகிறோம். நேர்காணலில் விதிப்படி ஆட்களை தேர்வு செய்வோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ