உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டதேவியில் ஜூலை 8 தேரோட்டம்; சிவகங்கை எஸ்.பி., ஆய்வு

கண்டதேவியில் ஜூலை 8 தேரோட்டம்; சிவகங்கை எஸ்.பி., ஆய்வு

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனி திருவிழா தேரோட்டம் ஜூலை 8 ல் நடக்கிறது. அன்று பாதுகாப்பு அளிப்பது குறித்து எஸ்.பி., ஆஷிஷ் ராவத் கண்டதேவியில் ஆய்வு செய்தார்.சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் ஆனி மாத திருவிழா நடக்கிறது. இதையொட்டி நடக்கும் தேரோட்டம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாட்டால் சில ஆண்டுகளாக தேர் ஓடாமலும், சில ஆண்டுகள் ஓடுவதுமாக இருந்தது. பின் புதிய தேர் செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுபடி கடந்த ஆண்டு தேர் வெள்ளோட்டமும், அதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் தேரோட்டமும் நடந்தது.இந்தாண்டு ஆனி கேட்டை நட்சத்திரத்திர தினமான ஜூலை 8 ல் தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் இக்கோயிலில் தரிசனம் செய்து கோயில் மற்றும் தேரோடும் வீதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்தார். டி.எஸ்.பி.,(பொறுப்பு) பார்த்திபன் மற்றும் போலீசார் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை