உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கானாடுகாத்தானில் கந்தசஷ்டி விழா   

கானாடுகாத்தானில் கந்தசஷ்டி விழா   

காரைக்குடி: கானாடுகாத்தான் சவுந்திரநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியருக்கு காப்பு கட்டுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. அக்., 27 ல் சூரசம்ஹாரம் நடைபெறும். இக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருக்கும் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. அன்றை தினம் ேஹாமம், அபிேஷகம் நடந்தது. பின்னர் வள்ளி தெய்வானையுடன் முருகன் கோயில் உட்பிரகாரத்தில் வீதி உலா வந்தார். சுவாமிக்கு தீபாராதனையும், 1008 சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தது. தினமும் காலை 10:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். அக்., 27 அன்று மாலை சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி, அக்., 28 அன்று காலை திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாட்டை கோயில் டிரஸ்டி ஏ.எல்., வெங்கடாச்சலம், பூஜைக்கான ஏற்பாட்டை ரமணி ஐயர் ஆகியோர் செய்து வருகின்றனர். தேவகோட்டை தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் எட்டு நாள் திருவிழா பாலதண்டாயுத பாணிக்கு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. கந்த சஷ்டி கழகத்தின் சார்பில் முருகனுக்கு லட்சார்ச்சனை தொடங்கியது. முருகபெருமான் அலங்காரத்தில் மயில் வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். சவுபாக்ய துர்க்கையம்மன் கோயிலில் முத்துக்குமார சுவாமி, பாலமுருகன் கோயில், தண்டாயுதபாணி மலைக்கோயில்களில் சஷ்டி விழா தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை