உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டவராயன்பட்டி புரவி எடுப்பு விழா

கண்டவராயன்பட்டி புரவி எடுப்பு விழா

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம்கண்டவராயன்பட்டியில் காரப்பிள்ளை அய்யனார்,வளநாட்டு கருப்பர் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது.இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனியில் புரவி எடுப்பு விழா நடைபெறும். ஆனி முதல் வெள்ளியன்று கிராமத்தினர் வேளாருக்கு பிடிமண் கொடுத்து புரவி வேலைப்பாடு துவங்கியது. தொடர்ந்து இரண்டாம் வெள்ளியில் நாள் வைத்து கொடுத்தல் நடந்தது.நேற்று முன்தினம் மூன்றாம் வெள்ளியன்று சூலைக்கரையிலிருந்து புரவிகளை கிராமத்தினர்ஊர்வலமாக எடுத்து வந்து புரவிப் பொட்டலில் சேர்த்தனர். தொடர்ந்து புரவிகளுக்கு பூஜை, தீபாராதனை நடந்தது.நேற்று மாலை 4:00 மணிக்கு புரவிகளுக்கு தீபாராதனை நடத்திய பின் கிராமத்தினர் புரவிகளை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து கோயிலில் புரவிகளை சேர்த்த பின்னர் மூலவருக்கு தீபாராதனை நடந்தது. கோயில் காளை அவிழ்ப்பு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ