உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாழாகும் காரைக்குடி அம்மா பூங்கா

பாழாகும் காரைக்குடி அம்மா பூங்கா

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.காலை மற்றும் மாலை நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டனர்.போதிய பராமரிப்பின்றி பூங்கா தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி கூடத்தில், உள்ள பல லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள் வீணாகி வருகிறது. தவிர பொருட்கள் பல உடைந்து கிடக்கிறது.உபகரணங்கள் திருடப்படுவதோடு இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.பூங்காவை முறையாக பராமரித்து, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை