மேலும் செய்திகள்
பிரான்ஸ் பெண்ணை மணந்த தேனி இன்ஜினியர்
28-Oct-2024
காரைக்குடி: காரைக்குடியில் தைவான் நாட்டு பெண்ணுக்கும், காரைக்குடி சாப்ட்வேர் இன்ஜினியருக்கும் பாரம்பரிய முறைப்படி காதல் திருமணம் நடந்தது. -சிவகங்கை மாவட்டம், பாதரக்குடி ஆறுமுகம் மகன் சதீஷ்குமார் 32. இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இதற்கு முன் தைவான் நாட்டில் பணி செய்தபோது, அதே நிறுவனத்தில் வேலை பார்த்த தைவானைச் சேர்ந்த ேஹாசின்ஹூய் 25, என்ற பெண்ணை காதலித்தார். பின் பணிமாறுதல் பெற்று அமெரிக்கா சென்றார். அவர்களது காதல் தொடர்ந்தது. இருவரும் திருமணம் செய்வதென முடிவு செய்து, பெற்றோரிடம் அனுமதி பெற்றனர். திருமணம் நேற்று காரைக்குடி திருமண மண்டபத்தில் நடந்தது. திருமணத்திற்கு தைவானில் இருந்து வந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, பட்டு சேலை அணிந்து பங்கேற்றனர்.
28-Oct-2024