காரைக்குடி ரேஷன் கடைகளில் வேட்டி தந்தால் சேலை இல்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்காமல், ஏதேனும் ஒன்று மட்டுமே விற்பனையாளர்கள் தருவதால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இத்தாலுகாவில் உள்ள 143 ரேஷன் கடைகள் மூலம் 91,000 கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வினியோகம் செய்யப்படுகிறது. கார்டுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 6 அடி கரும்பு, வேட்டி சேலை வினியோகம் செய்து வருகின்றனர். ஆனால், காரைக்குடி ஆலங்குடியார் வீதி, சந்தைப்பேட்டை பகுதி ரேஷன் கடைகளில் சேலை அல்லது வேட்டி மட்டுமே வழங்குவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் விற்பனையாளர்களிடம் இரண்டையும் வழங்குமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கைக்கேற்ப வேட்டி, சேலை வழங்கவில்லை. 50 சதவீதம் தான் ஒதுக்கியுள்ளனர். இதனால் ஏதேனும் ஒன்றை கொடுக்க வேண்டிய நிலைஉள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.