தேசிய ஹாக்கி போட்டிக்கு காரைக்குடி மாணவர்தேர்வு
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர் தேவதர்ஷன் தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளார். இம்மாணவர் 69வது தேசிய ஹாக்கி போட்டி தேர்வு போட்டியில் வயது 14 க்கு உட்பட்டோர் பிரிவில் விளையாடினர். இதில் தேர்வு செய்யப்பட்ட அம்மாணவர் மத்திய பிரதேச மாநிலம் திகம்ஹரில்நடக்க உள்ள தேசிய போட்டியில் விளையாட உள்ளார். இம்மாணவரை அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்தில்ராஜன், தலைமை ஆசிரியர் ரமேஷ், உடற்கல்வி இயக்குனர் முத்துக்கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.