உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்மாய் தூர்வாரும் பணிக்காக மரங்கள் கடத்தல்

கண்மாய் தூர்வாரும் பணிக்காக மரங்கள் கடத்தல்

மாவட்ட அளவில் 442 சிறு பாசன கண்மாய்களில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில், ஊரக வளர்ச்சி துறை மூலம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. சாக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 40 கண்மாய்களில் ரூ.4 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி மாத்தூர் ஊராட்சியில் உள்ள புதுக்கண்மாய் ரூ.12.37 லட்சம் மதிப்பீட்டிலும், கோம்புரான்வயல் கண்மாய் ரூ. 9.01 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடந்தது. இந்நிலையில், கோம்புரான்வயல் கண்மாயில் தூர்வாரும் பணி காரணமாக, கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இதனைப் பயன்படுத்தி சிலர் கண்மாயில் பல ஆண்டுகளாக இருந்த பெரிய தைல மரங்கள், நாவல் மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுள்ளதாகவும், ரூ.7 லட்சம் மதிப்புள்ள மரங்களை திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கிராம மக்கள் தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளனர்.காரைக்குடி தாசில்தார் ராஜா கூறியதாவது, மரங்கள் வெட்டி கடத்தப்பட்டதாக புகார்கள் வந்துள்ளது. இது சம்பந்தமாக சப் கலெக்டருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உரிய அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ