உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாநில ஆண்கள் ஹாக்கி போட்டி கோவில்பட்டி அணி வெற்றி

மாநில ஆண்கள் ஹாக்கி போட்டி கோவில்பட்டி அணி வெற்றி

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த மாநில ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது. சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான ஆண்கள் இரண்டு நாள் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 அணிகள் வரை பங்கேற்றன. நேற்று காலை நடந்த கால் இறுதி போட்டியில் அம்பேத்கர் கிளப் கோவில்பட்டி அணி, பாண்டவர்மண்டலம் கோவில்பட்டி அணியை 3:0 என்ற கோல் கணக்கிலும், நெய்வேலி அணி, திருச்சி அணியை 3:2 கோல் கணக்கிலும், சிவகங்கை அணியை, தென்மண்டல போலீஸ் அணி 3:2 என்ற கோல் கணக்கிலும், திருநகர் எஸ்.எஸ்.டி.எம்., அணி, மதுரை அணியை 5:2 கோல் கணக்கில் வென்றது.அதனை தொடர்ந்து அரையிறுதி போட்டிகளும் நடந்ததில், இறுதி போட்டிக்கு கோவில்பட்டி அம்பேத்கர் அணியும், கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்., அணியும் தகுதி பெற்றன.இதில், 1:0 கோல் கணக்கில் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம்., அணி வெற்றி பெற்று, கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, ரொக்க பரிசு வழங்கப்பட்டது. யங் சேலன்சர்ஸ் ஹாக்கி கிளப் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ