மாணவிகளுக்கு பாராட்டு
சிவகங்கை : சிவகங்கையில் நடந்த மாவட்ட அளவிலான 19 வயதிற்குட்பட்ட கைப்பந்து போட்டியில் புலியடிதம்மம் ஆக்ஸிலியம் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். அடுத்த மாதம் திருச்சியில் நடை பெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சிவகங்கை மாவட்டம் சார்பில் பங்கேற்கவுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் சம்பூர்ணம், தலைமை ஆசிரியர் சோபியாராயன், உடற்கல்வி ஆசிரியர் சரோத்குமார் பாராட்டினர்.