மேலும் செய்திகள்
தலைமை ஆசிரியர்கள் மீளாய்வு கூட்டம்
09-Nov-2024
சிவகங்கை ; சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் சிவகங்கை வட்டார அளவிலான கலைத் திருவிழாவில் 1 முதல் 8 வகுப்புகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நடந்தது. தலைமை ஆசிரியர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் நடேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரூபாராணி, ஆசிரியர் பயிற்றுநர் செல்வராணி முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை வட்டார கல்வி அலுவலர் பாலாமணி பாராட்டி சான்று வழங்கினார். கதை கூறுதலில் பரணிதரன், தனி நடிப்பில் ஹரிணி, வில்லுப்பாட்டில் அபிநயா குழுவினர், பரதநாட்டியத்தில் துர்ஹாசினி குழுவினர் முதல் பரிசு பெற்றனர். பேச்சுப் போட்டியில் பத்மஸ்ரீ, தேசபக்தி பாடலில் மகாலட்சுமி, நாட்டுப்புறப் பாடலில் சத்தியப்பிரியா, களிமண் சுதை வேலைப்பாட்டில் ஸ்டாலின், கிராமிய நடனத்தில் பூவிகா குழுவினர் இரண்டாம் பரிசு பெற்றனர்.
09-Nov-2024