உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காட்டாம்பூர் கோயிலில் செப்.4 கும்பாபிஷேகம்

காட்டாம்பூர் கோயிலில் செப்.4 கும்பாபிஷேகம்

திருப்புத்துார்; திருப்புத்துார் ஒன்றியம் காட்டாம்பூர் தர்மபுல்லணி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் செப்.4ல் நடைபெறுகிறது. இக்கோயில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதிதாக சன்னதி அமைத்து கிராமத்தினர் திருப்பணி செய்துள்ளனர். கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை ஆக.29 மாலையில் பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் துவங்குகின்றனர். மறுநாள் காலையில் கணபதி ேஹாமம்,நவக்ரஹ ஹோமம், மாலையில் வாஸ்துசாந்தி, ஆக.31 காலையில் மகாலெட்சுமி ேஹாமம், மாலையில் பிரவேச பலி நடைபெறும். செப். 1 மாலை முதற்கால யாக பூஜை, செப்.2 காலை இரண்டாம் காலமும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடைபெறும். செப்.3 காலையில் நான்காம், மாலையில் ஐந்தாம் கால யாகபூஜை நடைபெறும். செப்.4 காலையில் ஆறாம் காலயாக பூஜை நிறைவடைந்த பின்னர், காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கும்பாபிேஷகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை