உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழமேல்குடியில் கும்பாபிஷேகம்

கீழமேல்குடியில் கும்பாபிஷேகம்

மானாமதுரை: கீழமேல்குடி வழக்குடைய அய்யனார், சோனையா சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த மாதம் 20ம் தேதி கும்பாபிஷேக விழாவிற்காக காப்பு கட்டி, முகூர்த்தகால் நடப்பட்டு, யாகசாலைகள் அமைக்கப்பட்டன. 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை ஆரம்பமாகி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ரக்க்ஷா பந்தனம்,நாடி சந்தனம் உள்ளிட்ட 4 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு பூர்ணாஹூதி முடிந்ததும் சிவாச்சாரியார் ராஜேஷ் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை கோபுரத்திற்கு கொண்டு சென்று கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் வழக்குடைய அய்யனார், சோனையா சுவாமிகளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ