மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
11-Jan-2025
சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் பிப்.10ம் தேதி காலை 9:00 முதல் 10:25 மணிக்குள் நடைபெறும்.ஹிந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூச்சொரிதல் விழா நடைபெறும். இக்கோயிலில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்து பிப்.8ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு இசை, அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜை துவங்குகிறது. அன்று மாலை 4:00 மணிக்கு அங்குரார்ப்பணம்,கடஸ்தாபனம், தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெறும்.பிப்., 9 அன்று காலை 8:00 மணிக்கு மேல் இசை, 2 ம் கால யாக வேள்வி, எந்திர ஸ்தாபனம், பூர்ணாகுதி, மாலை 4:15 மணிக்கு 3ம் கால யாகவேள்வி, இரவு 8:00 மணிக்கு கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெறும். பிப்.10 அன்று அதிகாலை 5:30 மணிக்கு 4ம் கால யாகவேள்வி, கோ பூஜை, மகா பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல், காலை 9:05 முதல் 10:25 மணிக்குள் கடம் புறப்பாடு, விமான கும்பாபிேஷகம், சாலகோபுர கும்பாபிேஷகம் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் பிள்ளைவயல் காளி எழுந்தருள்வார். இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெறும். பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் ராமசுப்பிரமணிய ராஜா கும்பாபிேஷக பூஜைகளை செய்கின்றனர்.
11-Jan-2025