குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட மானிய தொகை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறும் என வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சண்முக ஜெயந்தி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ் இயந்திர நடவுக்கு ரூ.4000, நெல் விதை வினியோகம், உயிர் உரங்கள் ஏக்கருக்கு ரூ.60 மானியம், நுண்ணுாட்ட உரம் ஏக்கருக்கு ரூ.147.60 மானியமாக வழங்கப்படும்.இயந்திர நடவு 100 ஏக்கர், உயிர் உரம் 2384 ஏக்கர், நுண்ணுாட்ட சத்து 1615 ஏக்கர், நெல் விதை 13.0 டன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, என்றார்.