உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை, இளையான்குடியில் நெற்பயிர் பாதிப்பு: முழுமையாக கள ஆய்வு செய்து இழப்பீடு வழங்க எதிர்பார்ப்பு

மானாமதுரை, இளையான்குடியில் நெற்பயிர் பாதிப்பு: முழுமையாக கள ஆய்வு செய்து இழப்பீடு வழங்க எதிர்பார்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, மானாமதுரை, திருப்பு வனம் சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதியில் போதிய மழை இல்லாததால் நெற்பயிர்கள் வாடி வரும் நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நவ.15ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாததாலும், போதிய மழை இல்லாத கார ணத்தினாலும் காலக்கெடு தேதியை நீட்டிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நவ.30ம் தேதி வரை அரசு நீட்டித்து உள்ளது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில் மழை இல்லாததோடு, கடந்த ஒரு வாரமாக பனிமூட்டம் அதிகமாக உள்ளது. தண்ணீரின்றி வயல்கள் ஈரத்தன்மை குறைந்து வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஆகவே இந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முறையாக கள ஆய்வு செய்து முழுமையாக பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட சூராணம், சாலைக்கிராமம், முனை வென்றி பகுதி விவசாயிகள் கூறியதாவது: வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் குண்டு மிளகாய்க்கு அடுத்த படியாக நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த வருடம் போதிய மழை இல்லாத கார ணத்தினால் தற்போதே நெற்பயிர்கள் கருகி வருகின்றன. நீர் நிலைகளிலும் போதிய தண்ணீர் இல்லாமல் போனதாலும், வைகை ஆற்றில் தண்ணீர் திறந்தும் கால்வாயில் தண்ணீர் வராத காரணத்தினாலும் விவசாயிகள் மேற்கொண்டு பயிர்களை காப்பாற்ற முடியாமல் போராடி வருகிறோம். பயிர் காப்பீட்டிற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.496 பிரிமீயமாக செலுத்தியுள்ளோம். முழுமையாக விளைச்சல் இல்லாமல் இருந்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.26,800 வழங்கப்படும். வரும் டிச. அல்லது ஜனவரியில் வேளாண்மை, வருவாய்த்துறை மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு வருவாய் கிராமத்தில் 3 சர்வே நம்பர் கொண்ட வயல்களை தேர்ந்தெடுத்து அதில் அறுவடை செய்து அதில் எவ்வளவு விளைச்சல் உள்ளதோ அதனை கணக்கில் கொண்டு அந்த வருவாய் கிராமத்தில் உள்ள மொத்த வயல் களுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்கப்படும். இவ்வாறு கணக்கெடுக்கும் போது அந்த சர்வே நம்பர்களில் உள்ள வயல்களில் கிணற்றுப் பாசனம் மற்றும் வேறு வழிகளில் தண்ணீரைக் கொண்டு பயிர்கள் நன்றாக விளைந்து விளைச்சல் அதிகமாக இருந்தால் அந்த வருவாய் குரூப்பிற்குட்பட்ட அனைத்து வயல்களும் போதிய மழை மற்றும் தண்ணீர் இல்லாமல் நெற் பயிர்கள் கருகி இருந்தாலும் நன்றாக விளைச்சல் இருந்ததாக கூறி கணக் கெடுத்து பயிர் காப்பீட்டுத் தொகை மறுக்கப்படுகிறது. ஆகவே இந்த வருடம் முறையாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வயல்வெளிகளுக்கும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து பாதிப்பு எத்தனை சதவீதம் உள்ளது என்பதை கணக்கெடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் கடன் வாங்கி விவசாயம் செய்து வட்டி கூட கட்ட முடியாத நிலையில் உள்ளதால் இந்த வருடம் காலம் தாழ்த்தாமல் விரைவாக பயிர் காப் பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !