உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அதிகாரிகள் அலட்சியத்தால் பல லட்சம் வீண்; அரசின் கட்டடங்களால் பயனில்லை

அதிகாரிகள் அலட்சியத்தால் பல லட்சம் வீண்; அரசின் கட்டடங்களால் பயனில்லை

தேவகோட்டை தாலுகாவில் தேவகோட்டை, கண்ணங்குடி ஒன்றியங்கள் உள்ளன. அனுமந்தக்குடி கிராமம் ஒன்றிய தலைநகர் கண்ணங்குடி செல்லும் மெயின் ரோட்டில் மட்டுமின்றி முக்கியமான ஊர்களுக்கும், மூன்று மாவட்டங்களுக்கும் செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த ஊரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதன் காரணமாக கண்ணங்குடி ஒன்றியத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் அனுமந்தக்குடியில் தான் அமல்படுத்தப்படும். அரசின் அனைத்து திட்டங்களுக்கும் இங்கு கட்டடம் கட்டப்படுகின்றன. எதுவும் செயல்படுவது இல்லை. அதிகாரிகள் அலட்சியமாக தொடர் ஆய்வு எதுவும் செய்யாததால், சம்பந்தப்பட்ட திட்ட பணியாளர்களும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் எல்லா கட்டடங்களும் பயனில்லாமல் இருக்கிறது. அடுத்தடுத்து ரூ 50 லட்சத்தில் கட்டிய மூன்று கட்டடங்கள் முட்புதர் மண்டி, விஷ ஜந்துகளின் புகலிடமாக மக்கள் உள்ளே செல்ல வழியில்லாமல் இருக்கிறது. 2017ல் தனியார் வங்கி உதவியுடன் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையம், மண் புழு உரம் தயாரிப்பு மையம், மக்களின் வாழ்வாதார சேவை மைய கட்டடங்களும் இன்றைய சூழலில் அவசியமானது. ஆனால் கால் வைக்க கூட முடியாத நிலையில் உள்ளது. பெயர் தான் வாழ்வாதார மையம். மக்களுக்கு எந்த ஆதாயமும் இல்லாமல் பயனற்று இருக்கிறது. வாழ்வாதார சேவை மையத்தில் முறையாக பணியாளர்களை நியமித்து செயல்படுத்தலாம். இல்லையேல் தற்போது வழக்கமாக அரசு செய்வது போல் தனியார் இ. சேவை மையத்திற்கு குத்தகைக்காவது விட்டு செயல்படுத்தலாம். பள்ளி இருப்பதால் மாணவர்கள் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யவும் வசதியாக இருக்கும். மக்கள் அனைவரும் தேவகோட்டைக்கு அலைய வேண்டிய நிலை தான் உள்ளது. கலெக்டர் வீணாகி இருக்கும் கட்டடங்களை ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை