உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளியில் லேப்டாப் திருட்டு

பள்ளியில் லேப்டாப் திருட்டு

காரைக்குடி: காரைக்குடி சுபாஷ் நகர் மன்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையாக இருப்பவர் சலோமி அன்புசெல்வி. இவர், பள்ளி முடிந்ததும் பூட்டிவிட்டு அருகில் உள்ள மண்டபத்தில் சாவியை கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் பள்ளி துாய்மை பணியாளர், பள்ளியை சுத்தம் செய்வதற்காக பள்ளிக்கு வந்துள்ளார். அங்கு, பள்ளி அறை பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது. துப்புரவு பணியாளர் பள்ளி தலைமை ஆசிரியைக்கு தகவல் தெரிவித்தார். தலைமையாசிரியர் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த, 2 லேப்டாப், ஒரு டேப் திருடு போனது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ