மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
26-Sep-2025
சிவகங்கை: சிவகங்கையில் எல்.ஐ.சி., ஊழியர்களின் இந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் 'பொருளாதாரம் அடிப்படை உரிமை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. செயலாளர் தர்னீஸ்ராஜ் தலைமை வகித்தார். நாகராஜன் வரவேற்றார். இயக்க தலைவர் கண்ணப்பன், எல்.ஐ.சி., கிளை மேலாளர் சுரேஷ்குமார், பால்ராஜ், மரியலுாயிஸ், மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு முன்னாள் பொது செயலாளர் சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். கூட்டமைப்பு துணை தலைவர் வாஞ்சிநாதன், சிவகங்கை சி.ஐ.டி.யு., தலைவர் உமாநாத், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.
26-Sep-2025