உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  இலக்கிய போட்டி: காரைக்குடி அழகப்பா கல்லுாரிக்கு கேடயம்

 இலக்கிய போட்டி: காரைக்குடி அழகப்பா கல்லுாரிக்கு கேடயம்

தேவகோட்டை: தேவகோட்டையில் நடந்த இலக்கிய போட்டிகளில் காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி மாணவர்கள் முதலிடம் பெற்று, கோப்பையை தட்டி சென்றனர். தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி நிறுவனர் சேவுகன் அண்ணாமலை பிறந்த நாள் விழா நடந்தது. கல்லுாரி தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். முதல்வர் நாவுக்கரசு வரவேற்றார். காரைக்குடி அழகப்பா பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கான இலக்கிய போட்டி நடந்தது. இதில், 12 கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி மாணவர்கள் முதலிடம் பிடித்து கோப்பையை தட்டி சென்றனர். கலை, கலாசார போட்டிகளில் சேவுகன் அண்ணாமலை கல்லுாரி ஆங்கில துறை முதலிடம், இரண்டா மிடம் தமிழ்துறை மாணவர்கள் பெற்றனர். முன்னாள் துணை வேந்தர் கதிரேசன் பரிசு கோப்பைகளை வழங்கினார். கல்லூரி தலைவர் லட்சுமணன் ஏற்புரை ஆற்றினார். பேராசிரியர் கஸ்துாரிபாய் தேவசேனா, முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், பங்கேற்றனர். ஆட்சி குழு பொருளாளர் சேவுகன் நன்றி கூறினார். பேராசிரியர் வீரலட்சுமி தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை