மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
15-Jul-2025
சிவகங்கை: சிவகங்கையில் உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்டபேரவை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வீரையா தலைமை வகித்தார். பொது செயலாளர் முருகானந்தம் அறிக்கை வாசித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் வேங்கையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் தலைவராக வீரையா, செயலாளர் முருகானந்தம், பொருளாளர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் சேவியர், கணேசன், செல்வராஜ், உதவி செயலாளர்கள் அண்ணாத்துரை, வெள்ளைச்சாமி, விஜயபெருமாள் தேர்வாகினர். உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரம், குடிநீர் வசதிக்கென பணிபுரியும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும்.கிராம ஊராட்சி குடிநீர் ஆப்பரேட்டர், துாய்மை காவலர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும் என தீர்மானித்தனர்.
15-Jul-2025