உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உங்களை தேடி  உங்கள் ஊரில் முகாம்  

உங்களை தேடி  உங்கள் ஊரில் முகாம்  

சிவகங்கை: தேவகோட்டையில் மே 21 அன்று நடக்கும் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாமிற்கு மே 9 முதல் 19 வரை மனுக்களை வழங்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தேவகோட்டையில் நடைபெற உள்ள உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில், பொதுமக்கள் மனுக்களை வழங்கி தீர்வு பெற்று செல்லலாம். இக்கூட்டத்தில் கலெக்டர் தலைமையில் அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.எனவே இம்முகாமில் பங்கேற்க பொதுமக்கள் மே 9 தேதி முதல் 19 ம் தேதி வரை தேவகோட்டை வட்டத்திற்கு உட்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகம், கிராம ஊராட்சிகளில் மனுக்களை பதிவு செய்ய வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை