மானாமதுரை அருகே கவிழ்ந்த லாரி
மானாமதுரை; சென்னையிலிருந்து மானாமதுரை அருகில் உள்ள கல்குறிச்சி கிராமத்திற்கு சவாரிக்கு வந்த ஒரு கார் நேற்று காலை கல்குறிச்சியிலிருந்து சென்னைக்கு சென்ற போது பண்ருட்டியிலிருந்து பரமக்குடிக்கு கற்கள் ஏற்றி வந்த லாரி சிப்காட் அருகே கார் மீது மோதியதில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் அருகே கவிழ்ந்தது.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.