உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முகாமில் அலறிய ஸ்பீக்கர்: அதிர்ந்த நோயாளிகள்

முகாமில் அலறிய ஸ்பீக்கர்: அதிர்ந்த நோயாளிகள்

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் ஸ்பீக்கர் அலறியதால் நோயாளிகள் தவித்தனர். திருப்புவனம் பெண்கள் பள்ளி வளாகத்தில் நேற்று நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் 16 துறை அதிகாரிகளை ஒருங் கிணைத்து நடந்தது. கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் முகாமினை தொடங்கி வைத்து மாற்று திறனாளிகளுக்கு உப கரணங்கள் வழங்கினார். விழாவில் எம் எல்.ஏ., தமிழரசி, பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன்,சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் சீனிவாசன், இணை இயக்குநர் ( மருத்துவ பணிகள்) செந்தில்ராஜா, மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் அதிகம் ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்பட்டன. முகாமில் பொதுமக் களுக்கு எக்ஸ்ரே, இ.சி.ஜி., ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. முகாம் நடைபெறுவது குறித்து எந்த வித விபரமும் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வில்லை. இதனால் குறைந்த அளவிலேயே பங்கேற்றனர். முகாமில் அமைச்சர், அதி காரிகள் பேசுவதற்காக ஸ்பீக்கர்கள் வைக்கப்பட்டன. ஸ்பீக்கர்கள் அலறிய சப்தத்தில் முதியோர்கள் பலரும் தவித்தனர். டாக்டர்களும் நோயாளிகளிடம் விபரம் அறிந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை. விழா தொடங்கிய நிலையில் கலெக்டர் பொற்கொடி, தாசில்தார் ஆனந்தபூபாலன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் பாடப்படவில்லை. பொதுமக்களுக்கு பயனளிக்கும் திட்டத்தை அதிகாரிகள் ஏனோ தானோ என கடமைக்கு ஏற் பாடுகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை