மேலும் செய்திகள்
பள்ளி நேரத்தில் அச்சுறுத்தும் லாரிகள்
12-Sep-2025
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பள்ளி முன்பாக தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளால் விபத்து அபாயம் நிலவுகிறது. இங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் முன்பாக உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. பள்ளிக்குள் சத்துணவு பொருட்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கத்திட்ட பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்லும்போது இந்த மின்கம்பிகளில் உரசும் நிலை உள்ளது. மேலும் பள்ளிகளுக்குள் உயரமான பொருட்கள் கொண்டு செல்லும்போதும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விபத்து நிகழலாம் என்ற நிலையில் ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே பள்ளி முன்பாக தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை உயர்த்தி கட்டவும், தேவையெனில் கூடுதலாக மின்கம்பம் நடவும் பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
12-Sep-2025