தாழ்வாக செல்லும் மின்கம்பி
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பாசன வயலில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.இவ் ஒன்றியத்தில் பிரான்மலை ஊராட்சி பொய் சொல்லா மெய் ஐயனார் கோயில் முன்பாக உள்ள வயலில் உயரழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது. விவசாய காலங்களில் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை அவ்வழியாக ஓட்டிச்செல்ல விவசாயிகள் அச்சப்படுகின்றனர். பல வருடங்களாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக இவ்வயலில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.