உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறைந்தழுத்த மின் சப்ளை: குடிநீர் வினியோகம் பாதிப்பு

குறைந்தழுத்த மின் சப்ளை: குடிநீர் வினியோகம் பாதிப்பு

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே குறைந்தழுத்த மின்சாரத்தால் குடிநீர் வினியோகம் பாதித்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த ஒன்றியத்தில் அணைக்கரைபட்டி ஊராட்சி, ஓசாரிபட்டியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சில மாதமாக குறைந்தழுத்த மின் சப்ளை ஆகிறது. இதனால் வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதாகிறது. ஊராட்சியில் குடிநீர் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாததால், குடிநீர் வினியோகம் பாதிக்கின்றன. விவசாய நிலங்களில் மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மின்வாரியத்தில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. கடந்த மாதம் பிரான்மலையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிலும் கிராம மக்கள் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி