மகாளய அமாவாசை
இளையான்குடி: இளையான்குடி அருகே குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காசி சிவனுக்கு தங்களது கைகளால் தீர்த்தம் விட்டு முன்னோர்களை வழிபட்டனர். இளையான்குடி பரமக்குடி மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது. மானாமதுரை வைகை ஆற்றிலும் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.